பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தபால் துறை ஊழியரான 84 வயது முதியவர் , கடந்த ஒரு வருடத்தில் 12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
“கடந்தாண்டு ஜனவரியில் நடக்கவே முடியாத போது நான் கொரோனா கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டேன். இரண்டாவது டோஸை பிப்ரவரியில் எடுத்துக் கொண்டேன். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டபிறகு எனது உடல்நிலை சரியானது.”
“ஆதலால் நான் மூன்றாவது டோஸ் எடுக்க முடிவு செய்தேன். நான் எனது ஆதார் அட்டையை 4 முறையும், வாக்காளர் அடையாள அட்டையை 2 முறையும் சமர்ப்பித்து இதுவரை 12 டோஸ் போட்டுள்ளேன் என்று பிரம்மதேவ் மண்டல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
கொரோனா கோவாக்சின் டோஸ்களை முன்பதிவு செய்ய அவர் இணையத்தைப் பயன்படுத்தாமல் நேரில் சென்று பதிவு செய்துள்ளார். இதனால், முன்னர் எத்தனை தடுப்பூசி போட்டுள்ளார் என்பதைக் கண்டறியத் தவறியிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 4 அன்று நான் எனது 12 ஆவது டோஸை எடுத்த கொண்ட பிறகுதான் நான் 12 முறை தடுப்பூசி போட்டுள்ளேன் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். நான் 12 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன் என்று மண்டல் கூறியுள்ளார்.
தடுப்பூசியினால் எனக்கு எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. “தடுப்பூசி போட்டதனால் சிலர் இறக்கிறார்கள் என்கிற வதந்திகளை அழிப்பதற்காகவே நான் 12 முறை தடுப்பூசி போட்டேன். நான் இப்போது நலமாக இருப்பதாகவும், எனது இதயத் துடிப்பு விகிதம் 72 ஆக உள்ளது என்றும் மண்டல் கூறியுள்ளார்.
பீகார் சுகாதாரத் துறை, மாதேபுரா மாவட்ட நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றைக் கேட்டுள்ளது.
‘பிரதமர் திரும்பிப் போனதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல; விசாரணைக்குத் தயார்’ – பஞ்சாப் முதல்வர்
“நாங்கள் இந்த விஷயத்தை ஆப்லைன் பதிவு காரணமாக நடந்ததா என்பதை ஆராய்ந்து வருகிறோம். மண்டலிடம் இதுபற்றி ஏற்கனவே பேசியுள்ளோம்” என்று மாதேபுராவை சேர்ந்த மருத்துவர் ஷாஹி உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாட்னாவின் பல மாவட்டங்களில் வி.வி.ஐ.பி.களின் பெயரில் போலியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வழக்குகள் பல பதிவாகியுள்ளன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.