Aran Sei

பீகாரில், அரசை விமர்சித்தால் நடவடிக்கை – பாஜக கூட்டணி அரசு முடிவு

ரசு குறித்து “தவறான விமர்சனம்” வைப்பவர்கள் மீது, சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பீகார் அரசு முடிவு செய்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விமர்சனம் செய்யும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சைபர் குற்றப் பிரிவிற்கு தலைமை வகிக்கும் ஐ.ஜி, நய்யார் ஹஸ்நன் கான், பீகார் மாநிலத்தின் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் படுத்திய அமித் மால்வியா – எச்சரித்த டிவிட்டர்

அந்த கடிதத்தில், “அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்று அரசுக்கு எதிராக, சில தனிநபர்களும், அமைப்புகளும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவது தொடர்கதையாகியுள்ளது. அவை, சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தகுந்த குற்றச் செயல் ஆகும்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 21ஆம் தேதி, நய்யார் ஹஸ்நன் கான் எழுதியுள்ள அந்த கடிதத்தில்  “அப்படிப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த தகவலை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு (சைபர் கிரைம் இந்த துறையின் கீழ் உள்ளது) தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடந்ததுபோல் இந்தியாவிலும் நடக்கலாம் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சியான, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், இது பீகார் அரசின் ஒருதலை பட்சமான நடவடிக்கை என்றும், அரசின் பயத்தை இது வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளது.

“இந்த அரசால் பத்திரிகைகள் மற்றும் மக்கள் வைக்கும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இந்த ஒருதலை பட்சமான முடிவை எதிர்ப்போம்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செய்தித்தொடர்பாளர் மிர்தூன்ஜே திவாரி தெரிவித்துள்ளார்.

 

பீகாரில், அரசை விமர்சித்தால் நடவடிக்கை – பாஜக கூட்டணி அரசு முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்