Aran Sei

எதிர்க்கட்சியின் இப்தார் விருந்தில் கலந்துக்கொண்ட பீகார் முதல்வர்: பாஜக கூட்டணியில் அதிகரிக்கிறதா பிளவு?

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் இல்லத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஏற்பாடு செய்துள்ள தவாத்-இ-இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டுள்ளது அரசியல் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலங்களவை உறுப்பினர் பார்தி ஆகியோர் நிதிஷ் குமார் அருகில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்ததையும், மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டதையும் இவ்விருந்தில் காண முடிந்தது.

பீகார்: பாதுகாப்பையும் மீறி முதலமைச்சரைத் தாக்கிய இளைஞர்

விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூருக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்ரல் 23) வருகை தரவுள்ள நிலையில், ஆர்ஜேடி நடத்தியுள்ள இப்தார் விருந்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பங்கேற்றுள்ளார். இப்பங்கேற்பானது பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக, பீகார் சட்ட மேலவை செயல் தலைவர் அவதேஷ் நரேன் சிங், மாநில தொழில்துறை அமைச்சர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோரும் இவ்விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வலியுறுத்திய பீகார் பாஜக எம்எல்ஏ: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மதுவிலக்கு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு, மாநில பாஜக தலைமை ஆகிய பல்வேறு விவகாரங்களில், பாஜகவும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: New Indian Express

கொடநாடு மர்மம் அவிழப்போகும் உண்மைகள் – Race Course Ragunath Interview

எதிர்க்கட்சியின் இப்தார் விருந்தில் கலந்துக்கொண்ட பீகார் முதல்வர்: பாஜக கூட்டணியில் அதிகரிக்கிறதா பிளவு?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்