Aran Sei

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்

பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக இதற்கு ஆதரவு அளித்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் நிதிஷ் குமார் முடிவு

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்க மாநில அமைச்சரவையில் ஒரு முன்மொழிவு நிறைவேற்றப்படும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் சரியாக முன்னேற வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்கள் “சமூக-பொருளாதார கணக்கெடுப்பு” என்ற பெயரில் இதேபோன்ற கணக்கெடுப்புகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தேசிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த தரவுகள் வெளியிடப்படவில்லை. பாஜக அரசு சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து விட்டது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் தவிர வேறு எந்த சாதி பற்றிய கணக்கெடுப்பையும் நடத்த ஒன்றிய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்