பீகாரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீடு, பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் பெட்ரோல் பங்க் தாக்கப்பட்டுள்ளது.
மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீட்டைப் போராட்டக்காரர்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இது போன்ற வன்முறைகள் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இது சமுதாயத்திற்கு இழப்பு என்பதை போராட்டக்காரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் ரேணு தேவி கூறியுள்ளார். இந்த தாக்குதல்குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவரும் பெட்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
முன்னதாக, லக்கிசராய் பகுதியில் விகாரம்ஷீலா எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்டது. சமஸ்திபூரில் அமர்நாத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசப்பட்டது. சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ், ஜம்மு தாபி-குவஹாத்தி லோஹித் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் சில பெட்டிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அக்னிபத் விவகாரம்: நாட்டின் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைக்கிறார் – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருணா தேவியின் காரின் மீது கற்களை வீசிப் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
Source: ndtv
பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் Agnipath Scheme
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.