ராணுவத்திற்கு குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருணா தேவியின் காரின் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
பீகாரில் கொளுத்தும் வெயிலைத் பொருட்படுத்தாமல் ஜெகனாபாத், நவாடா மற்றும் சஹர்சா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தன்னுடைய வாகனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பேசியுள்ள அருணா தேவி, “எனது காரில் பொருத்தப்பட்டிருந்த பாஜக கட்சிக் கொடியைப் பார்த்ததும் போராட்டக்காரர்கள் ஆத்திரமுற்றனர். அதனால் அதை அவர்கள் கிழித்தெறிந்தனர். இந்த தாக்குதலில் எனது ஓட்டுநர், இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் இரண்டு தனிப்பட்ட ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும்.
பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
Source : NDTV
பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.