Aran Sei

வளர்ந்து வரும் 100 தலைவர்கள் பட்டியலில் சந்திரசேகர் ஆசாத் – டைம்ஸ் பத்திரிகை அறிவிப்பு

credits : the indian express

“பீம் ஆர்மி, சாதி ரீதியிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க, உரத்த சப்தமெழுப்புகிற மோட்டார் சைக்கிள்களில் கிராமங்களுக்குள் நுழைகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக (அதிகார வர்க்கத்தை) ஆத்திரமூட்டும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறது” என டைம்ஸ் பத்திரிகை பீம் ஆர்மி அமைப்பை பற்றி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், டைம்ஸ் பத்திரிகை உலக அளவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் நூறு பேரை அடையாளம் கண்டு, அவர்களின் பட்டியலை வெளியிடுகிறது. தற்போது ‘2021 டைம்ஸ் நெக்ஸ்ட்’ எனும் பெயரில், எதிர்காலத்தை வடிவமைக்கும் உலகத்தின் நூறு வளர்ந்து வரும் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் வரலாற்றை உருவாக்க இருக்கிறார்கள் எனவும், இதில் இருக்கும் பலர் ஏற்கனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை செய்திருக்கிறார்கள் எனவும், டைம்ஸ் 100 பட்டியலை தயாரித்துள்ள ஆசிரியர் மற்றும் இயக்குநர் டேன் மெக்சாய் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

‘ வன்புணர்வுக்கான தடயங்கள் இல்லை ‘ – ஹத்ராஸ் இறுதி அறிக்கை

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான, வளர்ந்து வரும் 100 தலைவர்களின் பட்டியலில், பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இடம்பெற்றுள்ளார்.

அவரைப் பற்றி டைம்ஸ் பத்திரிகை, “34 வயதாகும் சந்திரசேகர் ஆசாத், பீம் ஆர்மியின் தலைவராக உள்ளார். பீம் ஆர்மி, தலித்துகளை கல்வியின் மூலம் வறுமையிலிருந்து மீட்க உதவுவதற்காக, பள்ளிகளை நடத்துகிறது. ஒரு தனித்துவமான நடைமுறையை கடைப்பிடிக்கின்ற பீம் ஆர்மி,  சாதி ரீதியிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க உரத்த சப்தமெழுப்புகிற மோட்டார் சைக்கிள்களில் கிராமங்களுக்குள் நுழைகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக (அதிகார வர்க்கத்தை) ஆத்திரமூட்டும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறது” என தெரிவித்துள்ளது.

ஹத்ராஸ் வன்கொடுமை – ஆசாத்தை வெளிப்படையாக மிரட்டும் உயர் சாதியினர்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆசாத் மற்றும் பீம் ஆர்மி “நீதிக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தது” என டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

’என்னிடம் ரூ.1 லட்சம் உள்ளதாக நிரூபிக்க முடியுமா?’ – சந்திரசேகர் ஆசாத் சவால்

இந்த பட்டியலில் சந்திர சேகர் ஆசாத்தை தவிர, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களான, இன்ஸ்டாகார்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா, கெட் அஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபிஇ ஷிகா குப்தா மற்றும்  அப்சோல்வ் நிறுவனர் ரோஹன் பவலூரி, இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனாக், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞர் விஜயா கடே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் 100 தலைவர்கள் பட்டியலில் சந்திரசேகர் ஆசாத் – டைம்ஸ் பத்திரிகை அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்