Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு

ன்றிய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டு நிறைவையொட்டி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சியினரும்,அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கத்தினரும் பலதரப்பட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிதி இல்லை என்றால் அரசு பணத்தில் விளம்பரம் ஏன்? – ஒன்றிய அரசுக்கு எதிர்கட்சிகள் கேள்வி

இதுகுறித்து தெரிவித்துள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு , செப்டம்பர் 26 அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும், இதற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பதாக கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநில அரசுகள் முழுஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும், காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாஜக விவசாயிகளை திசை திருப்புகிறது – ராகேஷ் திகைத் குற்றச்சாட்டு

இந்தப் போராட்டத்தின் போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்ற அத்தியாவசியக் கட்டமைப்புகள் செயல்படும் என்றும், தன்னிச்சையானப் பங்களிப்போடு, அமைதியான முறையில் நடைபெறும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆந்திரபிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர், செப்டம்பர் 26 இரவு முதல் செப்டம்பர் 27 மதியம் வரை அம்மாநிலத்தில் பேருந்துகள் இயங்காது என்று கூறியுள்ளார்.

இதேபோன்று இதுகுறித்து தெரிவித்துள்ள திமுகவின் விவசாயஅணி மாநிலத் தலைவர் என்.கே.கே பெரியசாமி, “விவசாய விரோத ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 27ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

SOURCE: THE HINDU 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான  விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்