கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வரும் டிசம்பர் மாதம் முதல் பகவத் கீதை அறநெறி கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கற்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, செப்டம்பர் 19, அன்று கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர் எம்.கே.பிரனேஷ், “எதிர்ப்புகள் இல்லை என்றபோதிலும், பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த மாநில அரசு தயங்குகிறதா?’’ என்ற கேள்வியை எழுப்பினார்.
பள்ளிகளில் பகவத் கீதையும் ராமாயணமும் கற்றுத்தர வேண்டும் – உத்தரகண்ட் கல்வி அமைச்சர் கருத்து
அதற்கு பதிலளித்துப் பேசிய கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், “மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டிசம்பர் முதல் பகவத் கீதை, அறநெறிக் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கற்பிக்கப்படும். இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பகவத் கீதை அறநெறிக் கல்வி பாடத்தின் கீழ் கற்பிக்கப்படும். இது தொடர்பாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரைவில் முடிவெடுப்போம்’’ எனத் தெரிவித்தார்.
“பகவத் கீதை குர்ஆனைப் போன்ற ஒரு மத புத்தகம் அல்ல, அது எந்த மத நடைமுறைகளையும் ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை மாணவர்களுக்கு தார்மீக பாடங்களை கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பல உத்வேகத்தை அளித்திருக்கிறது. குர்ஆன் ஒரு மத நூல் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – குஜராத்தை தொடர்ந்து கர்நாடக அரசும் அறிவிப்பு
ஆனால், பகவத் கீதை அப்படியல்ல. கடவுளை வழிபடுவது பற்றியோ, எந்த மதப் பழக்க வழக்கங்களைப் பற்றியோ அதில் பேசவில்லை. அதில் தார்மீக விஷயங்கள் பேசப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே ஒரு குழு பகவத் கீதையை பள்ளியில் பயிற்றுவிப்பது தொடர்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் முதல் அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இருப்பினும், இதைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், போதனைகளின் அடிப்படையில் மட்டுமே வகுப்புகள் அமையும். மேலும், இந்த பகவத் கீதை தொடர்பாக எந்த தேர்வும் இருக்காது”என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், “பகவத் கீதையை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது, கொரோனா தொற்றுநோயைவிட ஆபத்தானது” என, மூத்த காங்கிரஸ் தலைவரான தன்வீர் சைத் கூறியுள்ளார்.
Source : indian express
என்னை சூத்திரன்னு சொன்னா கடவுளே தேவையில்ல I Sathiya Prabhu Interview I A Rasa Controversial Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.