கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறித்து நாடு கடத்தும் முயற்சியில் பெங்களூரு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு புறநகர் காவல் எல்லைப்பகுதிகளான சர்ஜாபுரா, அனுகொண்டனஹள்ளி மற்றும் ஹெப்பகோடி பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் வங்காள மொழி பேசும் இந்திய இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வார இறுதியில், வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், அவர்கள் மீது வன்முறையை பயன்படுத்தியது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் மதத்தின் பெயரில் பிரிக்கப்படும் செயல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இருப்பினும், இந்த கூற்றுகளை காவல்துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
சனிக்கிழமை (மே 21) மாலை 4 மணிக்கு இரண்டு டஜன் காவல்துறையினர் எங்கள் முகாமிற்குள் நுழைந்து தடியடி நடத்தினர். நாங்கள் எங்களுடைய அன்றைய பணிகளை முடித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் எங்களைக் கடுமையாக்க தாக்கினர். நாங்கள் உடனடியாக எங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டும் என அவர்கள் வர்புறுத்தினர்” என்று முகாமில் வசிக்கும் துபார் ஷேக் தெரிவித்துள்ளார்.
சோதனையிடும் பணியில் ஆண் காவலர்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர்கள் பெண்களை சோதனையிட்டு ஆவணங்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்துத்துவா – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?
சோதனை தொடர்பான செய்தி பெங்களூரு நகரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்களுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த நகரத்தில் தொடர்ந்து வாழ்வது பாதுகாப்பானதா என்பதை அறிய விரும்பும் வகையில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன என்று மனித உரிமை ஆர்வலர் ஆர். கலீமுலா தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2019-ம் ஆண்டு காவல்துறை அடக்குமுறை நடைபெற்றது. அந்த நேரத்தில் நகரத்தில் இருந்து பெருமளவில் மக்கள் வெளியேற வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக குறியேறியவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
சோதனை நடத்திய அனகொண்டஹள்ளி காவல்துறையினர், நாங்கள் எங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் குடியுரிமை அடையாளத்தை நிறுவும் பிற ஆவணங்களை சமர்பித்த பிறகும் நகரத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டனர் என்று துபார் ஷேக் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறையினர் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். உள்ளூர் ஆவணங்களை பெறுவது எளிது என்பதால் தேசிய இனங்களை நிறுவுவதற்கு வேறு வழிகளை பயன்படுத்துகிறோம் என்று காவல் கண்காணிப்பாளர் வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Source: NDTV
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview | Nenjukku Needhi | Arunraja
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.