Aran Sei

பெங்களூரில் தீவிரமடையும் ஹிஜாப் விவகாரம்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கூட்டம் கூட தடை

ர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல்துறை 144 ஊரடங்கின் கீழ் சில தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சுற்றி 200 மீட்டருக்கு, எந்த கூட்டமோ போராட்டமோ ஏற்பாடு செய்யக்கூடாது என்று அவ்வுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் கர்நாடகாவில் பல போராட்டங்கள் நடைபெற்றதால், உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

கேரளா: மாணவர் தலைவரான ஹிஜாப் அணிந்த எஸ்.எப்.ஐ., மாணவி

அதைத் தொடர்ந்து, மேலும் போராட்டங்கள் பாரவா வண்ணம், தடுப்பு நடவடிக்கையாக, நேற்று(பிப்பிரவரி 21), பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் இத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மார்ச் 8 ஆம் தேதி வரை பெங்களூரு நகரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அனைத்து வகையான ஆர்ப்பாட்டங்களுக்கும் கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ளார்.

Source: New Indian Express 

பெங்களூரில் தீவிரமடையும் ஹிஜாப் விவகாரம்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கூட்டம் கூட தடை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்