Aran Sei

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டமே காரணம் எனப் பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி குற்றம்சாட்டியிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு) மாநிலச் செயலாளராகச் செயல்பட்டு வரும் பமீலா கோஸ்வாமி மற்றும் அவர் நண்பர் பிரபீர் குமார் தே ஆகியோர் போதைப்பொருள் (கொக்கேய்ன்) கடத்தலில் ஈடுபட்டனர் எனக்கூறி காவல்துறை கைது செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சில லட்சங்கள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் (100 கிராம் கொக்கேய்ன்) பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும்,  காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது  என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வள்ளுவரை காவியாக்கிய சிபிஎஸ்இ: ’ஆரிய வித்தையை தமிழகம் ஏற்காது’ – ஸ்டாலின் கண்டனம்

இது தொடர்பாகக் பேசிய காவல்துறை அதிகாரிகள், “அவர்(பமீலா) பல நாட்களாகப் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இன்றைய தினம், தன்னுடைய வாடிக்கையாளருக்குப் போதைப்பொருட்களை கொடுக்க முற்பட்டபோது, 8 வாகனங்களில் சென்று அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தோம்” எனக் தெரிவித்ததாக என்டிடிவி   கூறியுள்ளது.

உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட பமீலா, காரில் இருந்து இறங்கும்போது, “இது பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் உதவியாளராக இருக்கும் ராகேஷ் சிங்கின் சதித்திட்டம். அவரைக் கைது செய்ய வேண்டும். வழக்கைச் சிறப்பு புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும்” எனக் கூறியதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,  இந்தக் குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் உள்ளே மீண்டும் கூறவில்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய மேற்கு வங்க பாஜகவின் செய்தி தொடர்பாளர், சாமிக் பட்டாச்சார்யா, “மாநில அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் பட்சத்தில், இது ஜோடிக்கப்பட்ட வழக்காகக் கூட இருக்கலாம்” எனக் கூறியிருந்த நிலையில், பமீலா இவ்வாறு கூறியிருப்பதாக என்டிடிவி  கூறியுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்