Aran Sei

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்

Image Credit : indianexpress.com

மேற்கு வங்காள பாஜகவின் தலைவரான திலீப் கோஷ், நேற்று பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில், தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவின் ராம்பூர்ஹட் அலுவலகத்தில் இப்படி தவறாக கொடியை ஏற்றியவுடன் தவறை உணர்ந்த அவர் கொடியை கீழே இறக்கி சரியாக மறுபடியும் ஏற்றியுள்ளார்.

நந்திகிராமில் களமிறங்கும் மம்தா பானர்ஜி – உச்சகட்ட பரபரப்பில் மேற்கு வங்க அரசியல்

மேற்கு வங்காளத்தில் ஒரு சில மாதங்களில் வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாஜக முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தேசியக் கொடியை ஒழுங்காக ஏற்றத் தெரியாதவர்கள் நாட்டையோ, ஒரு மாநிலத்தையோ நிர்வகிக்க தகுதி இல்லாதவர்கள்” என்று மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரசின் மாவட்டத் தலைவர் அனுபிரதா மொண்டல் கூறியுள்ளார்.

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

“இது ஒரு வெட்ககரமான நிகழ்வு. தவறுதலாக இது நடந்து விட்டது. தேசியக் கொடியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் யாருக்கும் இல்லை. எதிர்காலத்தில் கவனமாக இருக்கும்படி கட்சி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று திலீப் கோஷ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்