Aran Sei

லட்சத்தீவு மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்விற்கு சவால் ஏற்பட்டுள்ளது – பினராயி விஜயன் கண்டனம்

credits : the indian express

ட்சத்தீவின் புதிய நிர்வாகி (Administrator)  முன்மொழிந்துள்ள சட்ட திருத்தங்களால், அம்மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்விற்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “லட்சத்தீவுகளில் இருந்து வரும் செய்திகள் மிகவும் தீவிரமானவை. அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரம் மீது சுமத்தப்பட்டிருக்கும் சவால்களை ஏற்க முடியாது. லட்சத்தீவுகளுடன் ஒரு வலுவான உறவையும், ஒத்துழைப்பையும், நீண்ட வரலாறையும் கேரளா கொண்டுள்ளது. அதை முறியடிக்க நினைக்கும் வஞ்சகமான முயற்சிகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றோம். அவர்கள் விலகி இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

லட்சத்தீவுகள் நிர்வாகியின் எதேச்சதிகார போக்கை, கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்தீவு மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்விற்கு சவால் ஏற்பட்டுள்ளது – பினராயி விஜயன் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்