Aran Sei

‘பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட கூடாது என மிரட்டல்’ – இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தென்னாப்பரிக்க வீரர் புகார்

பாகிஸ்தானில் நடைபெறும் காஷ்மீர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டி வருவதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹர்செல் கிப்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் காஷ்மீர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானின் முசாபராபாத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தென்னாபிரிக்க வீரர் ஹர்செல் கிப்ஸ், இலங்கை முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷன் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனிஷர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்க கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டுவதாக ஹர்செல் கிப்ஸ் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”இந்திய கிரிக்கெட் வாரியத்தினர் தேவை இல்லாமல் பாகிஸ்தான் உடனான அவர்களது அரசியல் பிரச்னையை என்னிடம் எடுத்து வருகின்றனர். பாகிஸ்தானில் நடைபெறும் காஷ்மீர் பிரீமியர் லீக்கில் நான் விளையாடவிருப்பதை தடுக்க முயற்சிக்கின்றனர். மேலும், கிரிக்கெட் சார்ந்த பணிகளுக்காக இந்தியாவிற்குள் நுழைவதை தடை செய்வோம் என மிரட்டி வருகின்றனர். இது கேலிக்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்க வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்து வருவதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரசீத் லதீஃப் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

‘பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட கூடாது என மிரட்டல்’ – இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தென்னாப்பரிக்க வீரர் புகார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்