Aran Sei

ஜம்மு காஷ்மீரில் வங்கி ஊழியர் சுட்டுக் கொலை: கடந்த 3 நாட்களில் இரண்டு அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்

ம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

எல்லகி தேஹாதி வங்கியின் ஊழியரான விஜய் குமாரை வங்கி வளாகத்திற்குள் வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் அண்மையில் குல்காம் கிளைக்கு மாற்றலாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

காஷ்மீர்: துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மரணம்; ஒரே மாதத்தில் ஏழுபேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

இரண்டு தினங்களுக்கு முன்பாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரஜ்னி பாலா என்ற பெண் ஆசிரியர் தீவிரவாதிகளால சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மே 12 அன்று, புட்காம் மாவட்டத்தின் சதூரா தாலுகாவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் பண்டிட்கள் குறித்து படம் எடுத்தால் மட்டும் போதாது; பாதுகாப்பும் வேண்டும் – காஷ்மீரி பண்டிட்கள் கோரிக்கை

ரஜ்னி பாலா மற்றும் ராகுல் பட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை காஷ்மீரில் உள்ள பண்டிட்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Source: The Wire

ரூ 9602 கோடி GST நிலுவை தொகை வருவதற்கு Stalin காரணம் Ramasubramanian | Annamalai Karthik Gopinath

ஜம்மு காஷ்மீரில் வங்கி ஊழியர் சுட்டுக் கொலை: கடந்த 3 நாட்களில் இரண்டு அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்