Aran Sei

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – வங்கதேச கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

Credit: The Scroll.in

வ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று வங்கதேச கல்வி அமைச்சர் திபு மோனி கூறியுள்ளார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் நெருக்கமாக செயல்படும் குழுவான இந்தியா பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த இந்தியா ஐடியாஸ் கான்க்ளேவில் நிகழ்ச்சியில், ‘2047ல் இந்தியா’ என்ற தலைப்பில் விவாதிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் – நிலைப்பாட்டை மாற்றிய ஒன்றிய அரசு

“உலகளாவிய அளவில் மதிப்பிற்குரிய ஒன்றாக இந்தியா உருவெடுக்க, அதன் நிறுவனத் தந்தைகளால் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கனவுகளை நனவாக்க முயற்சிக்க வேண்டும்” என்று மோனி தெரிவித்துள்ளார்.

“குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் உத்தரவாதம் அளிப்பது, இந்தியா தனது குடிமக்களின் திறனைக் ஊக்குவிக்கலாம். குறிப்பாக, பட்டியல் சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓபிசிக்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாண்ட்: வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

“மத சுதந்திரம் மற்றும் மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் குறித்த அரசியலமைப்பின் விதிகளை பக்கச்சார்பற்ற முறையில் பயன்படுத்துவது மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: The Indian Express

மதவெறி பிடித்து அலையும் சங்கி கும்பல் Madukkur Ramalingam | Gyanvapi Masjid | Shivling in Mosque| UP

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – வங்கதேச கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்