Aran Sei

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

credits : cnn international

னித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை, வங்காள விரிகுடாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தீவுக்கு வங்கதேச அரசு அனுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆவர். அக்டோபர் 2016-ல் இராணுவத்தின் அடக்குமுறையால் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் அருகிலிருக்கும் நாடான வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.

வங்கதேசத்தில் தஞ்சமடையும் ரோஹிங்கியாக்களை அந்த அரசு, வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தாழ்வான தீவுக்கு (பாஷன் சார்)  தொடர்ந்து அனுப்பி வருகிறது. இது புயல் அபாயமுள்ள தீவு என்பதால் அகதிகளை இடம் மாற்றுவதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அனைத்து எதிர்ப்புகளையும் மீறி வங்க தேசம் இந்த நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தி இந்து கூறியுள்ளது.

மியன்மார் தேர்தல் – ரோஹிங்கியா முஸ்லீம்களின் உரிமைகள் மீட்கப்படுமா?

மியான்மரிலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வெளியேறினாலும், பாஷன் சாரில் 1 லட்சம் பேருக்கான இட வசதியே இருப்பதாக வங்க தேசத்தின் கடற்படை தளபதியான மொசமால் ஹேக் தெரிவித்துள்ளதாக தி இந்து வில் வெளியான செய்தி கூறுகிறது.

மியன்மார் தேர்தல் – ரோஹிங்கியா முஸ்லீம்களின் உரிமைகள் மீட்கப்படுமா?

மியான்மர் வன்முறையிலிருந்து தப்பிய 1,642 ரோஹிங்கியாக்கள் (முதல் குழு) கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

இந்நிலையில், தற்போது காக்ஸ் பஜாரின் பரந்த அகதிகள் முகாம்களில் வசித்து வந்த சுமார் 2,000 ரோஹிங்கியாக்கள் பாஷன் சார் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தக் குடியேற்றத்தில் இதுவரை 7 ஆயிரம் பேர் அனுப்பபட்டுள்ளதாக தி இந்துவில் வெளியான செய்தி கூறுகிறது.

மேற்கு வங்க தேர்தலிலும் தனித்து போட்டியா? – ஒவைசி கூறுவது என்ன?

மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், தீவுக்குச் செல்வதற்கு, அகதிகள் தாமாக முன்வந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனிநபர் வருமானம் – இந்தியாவை முந்துகிறது வங்கதேசம் : ஐஎம்எப்

ரோஹிங்கியா அகதிகள் அனுப்பபடும் பாஷன் சார் தீவு கடுமையான வானிலையை கொண்டது,  1991-ம் ஆண்டில், ஏற்பட்ட சூறாவளியில் ஆயிரக்ககணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்