Aran Sei

கள்ளக்குறிச்சி வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது – உத்தரவை திரும்பப் பெற ரெட் பிக்ஸ், அரண்செய் உள்ளிட்ட சேனல்கள் வேண்டுகோள்

ள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று ரெட் பிக்ஸ், அரண்செய், பேரலை உள்ளிட்ட யூடியூப் சேனல்களின் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில், மாணவியின் பெற்றோர் அதை முற்றிலும் மறுத்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது, அவசியமற்றது – சீமான்

இந்த வழக்கு தொடர்பாக களத்திற்குச் சென்று புலனாய்வு நடத்தி பல வெளிவராத உண்மைகளை டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பல அப்பாவி இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வெளிக்கொண்டு வந்ததும் இதே ஊடகங்கள்தான்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார். 29.08.22 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில். மாணவி மரணம் தொடர்பாக “இணை விசாரணை” (Parallel investigation) நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தலித் கிறிஸ்தவர்கள், தலித் இஸ்லாமியர்கள் பட்டியல் சாதியில் சேர்க்கப்படுவார்களா? – நீளும் உரையாடல்

நீதிமன்றம் பயன்படுத்தியுள்ள இணை விசாரணை என்ற வார்த்தையே ஆபத்தானது என நாங்கள் கருதுகிறோம். அரசும். அதிகாரவர்க்கமும் மறைக்க நினைக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே பத்திரிகையாளர்களின் கடமை. அந்தப் பணியையே இந்த வழக்கிலும் அனைத்து ஊடகங்களும் செய்து வருகின்றன. அவ்வாறு இருக்கையில், பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுக்கும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த நமது தலைவர்கள். கருத்துச் சுத ந்திரத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமையாக்கியுள்ளனர். இந்த உரிமையின் அடிப்படையில் செயல்படும் பத்திரிகையாளர்களை பேசக்கூடாது என்பதும். பேசினால் நடவடிக்கை பாயும் என்று உத்தரவிடுவதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

ஆகவே, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள் இணை விசாரணை நடத்தக் கூடாது என்றும். அதுகுறித்து செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தவறான முன்னுதாரணமாகவே கருதுகிறோம்.

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

இந்த உத்தரவை திரும்பப்பெற்று கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று  ரெட் பிக்ஸ், அரண்செய், ஜீவா டுடே, தமிழ் கேள்வி, யூடேர்ன், தமிழ் குரல், யூ 2 புரூடஸ், மெட்ராஸ் ரிவ்யூ,  ஓபீனியன் தமிழ், தமிழ் நிறம், ரூட்ஸ் தமிழ், தமிழ் மின்ட் ஆகிய யூடியூப் சேனல்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras Hc demands for ban on YouTube channels – Kallakurichi Case Latest update | Haseef | Deva

கள்ளக்குறிச்சி வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது – உத்தரவை திரும்பப் பெற ரெட் பிக்ஸ், அரண்செய் உள்ளிட்ட சேனல்கள் வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்