Aran Sei

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மக்களின் உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியின் தவறான மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் கைது மற்றும் சோதனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். பேச்சு சுதந்திரம், எதிர்ப்புகள் மற்றும் அமைப்பு ஆகியவை, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, ஆட்சியாளர்களால் இரக்கமின்றி நசுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கும், எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தாமல் மக்களைப் பயமுறுத்துவதற்கும், விசாரணை அமைப்புகளையும், சட்டங்களையும் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. நாட்டில் பிரகடனப்படுத்தப்படாத அவசரநிலை தெளிவாக காணப்படுகின்றது என எம்.கே.பைஸி தெரிவித்துள்ளார்.

‘மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்’ – பிஎப்ஐ தடைக்கு கேரள சிபிஎம் கருத்து

மேலும், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், மக்களும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவும், இந்திய அரசியலமைப்பின் ஜனநாயகம் மற்றும் மதிப்புகளை காப்பாற்றவும் தங்கள் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது என்றும் பைஸி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனக்கு தானே குண்டு போடும் சங்கிகள் | வெடிகுண்டுப் பயிற்சி எடுக்கும் மங்கிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்