Aran Sei

அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை – கர்நாடக அரசு உத்தரவு

திக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகா முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது.

தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன்

பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் தொலைவிற்கு கிலோமீட்டருக்கு ரூ.15 வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த வாடகை ஆட்டோக்ளில் குறைந்தபட்சமாக ரூ.100 வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.

OLA, UBER ஐ புறக்கணித்து புதிய செயலியை உருவாக்கிய தொழிற்சங்கம் – கார்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் கோயம்புத்தூர் ஆட்டோ ஓட்டுனர்கள்

கர்நாடக போக்குவரத்துத் துறை சார்பில் ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகைக்கு கார்களை மட்டுமே இயக்க மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிறுவனங்கள் அனுமதியின்றி ஆட்டோக்களை வாடகை சேவையில் ஈடுபடுத்தி வருகிறது. இது சட்டப்படி குற்றம். எனவே அடுத்த மூன்று நாட்களுக்குள் பெங்களூருவில் இந்த நிறுவனங்கள் வாடகை சேவையில் ஈடுபடுத்தி வரும் ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட வாகன ஓட்டுநர் – டீசல் விலை உயர்வே காரணமென ஓட்டுநர்கள் போராட்டம்

மேலும் இந்த ஆட்டோக்களை வாடகையில் ஈடுபடுத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறை இதுகுறித்து பெங்களூரு ஆட்டோ சங்கத்தினர் கூறுகையில் பெங்களூருவில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நம்ம யாத்திரி என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்த செயலி மூலம் ஆட்டோக்களை வாடகைக்கு பதிவு செய்ய முடியும் எனவும் கூறினர். மேலும் இந்த நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : telegraphindia

கண்டமான வந்தே பாரத் ரயில் | ‘எனக்குன்னே வருவீங்களா’ பதறும் சங்கிகள்

அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை – கர்நாடக அரசு உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்