Aran Sei

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அலோபதி மருத்துவ முறையை யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி சர்ச்சையில் சிக்கியவர் பாபா ராம்தேவ்; பதஞ்சலி என்ற பெயரில் ஆயுர்வேத அடிப்படையில் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு அலோபதி (ஆங்கில) மருத்துவத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருந்தார்.

கடந்த ஆண்டு பாபா ராம்தேவ் வெளியிட்ட ஒரு காணொளியில், கொரோனா காலத்தில் ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார். இதற்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

எண்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம் – நடந்தது என்ன?

அலோபதி மருத்துவத்தை தவறாகப் பேசிய பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கும் தொடர்ந்தது.

இவ்வழக்கில் பல்வேறு கட்டவிசாரணைகளை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது, பாபா ராம்தேவுக்கு என்னதான் ஆச்சு? யோகாவில்தான் ராம்தேவ் புகழ் பெற்றவர். யோகா பயின்ற ஒருவர் அலோபதி மருத்துவ முறையை எப்படி விமர்சிக்க முடியும்? அலோபதி மருத்துவ முறைகளை விட ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ முறைதான் சிறந்தது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் இருக்கிறதா? மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்பை ராம்தேவ் விமர்சிப்பது என்பது பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்கக் கூடியதாகும்.

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

பாபா ராம்தேவ் இதர மருத்துவ முறைகள் குறித்து அவதூறு பரப்பக் கூடாது. என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசும் பாபா ராம்தேவும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Kallakurichi Sakthi School Ravikumar & Shanthi sons are about to get investigated – Deva’s Update 13

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்