பாபி தியோல் நடிப்பில், பிரகாஷ் ஜா இயக்கும் ‘ஆஷ்ரம் 3’ என்ற இணையத் தொடர் சனாதன தர்மத்தை அவதூறு செய்வதாக குற்றஞ்சாட்டி, அத்தொடரின் படப்பிடிப்பில் பஜ்ரங்தள செயல்பாட்டாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் பிரகாஷ் ஜா மீது மையை வீசியுள்ளனர்.
நேற்று(அக்டோபர் 24), மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடைபெற்றுள்ள ஆஷ்ரம்-3 படப்பிடிப்பு தளத்திற்குள், சுஷில் சுடோலே தலைமையில், தோராயமாக 100-200 பஜ்ரங்தள உறுப்பினர்கள் நுழைந்துள்ளனர். படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பிற்கான பொருட்கள் உட்பட, ஐந்து வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர்.
‘இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் காம சாஸ்திரம்’ – நூலை எரித்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் போராட்டம்
இச்செயலை படப்பிடிப்பு குழுவினர் எதிர்த்தபோது, அவர்கள் படப்பிடிப்புக் குழுவினரையும் தாக்கியுள்ளதால், சிலர் காயமடைந்துள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் தடிகளால் தாக்கப்படும் காணொளி வைரலாகி உள்ளது.
தாக்குதலின்போது, ‘பிரகாஷ் ஜா ஒழிக’, ‘பாபி தியோல் ஒழிக’, ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்ற முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும், பஜ்ரங்தள உறுப்பினர்கள் இயக்குனர் பிரகாஷ் ஜா மீது மையை வீசியுள்ளனர். அப்போது அவ்விடத்தில் இருந்த சில ஊடகவியலாளர்களிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.
“பஜ்ரங்தள் பிரகாஷ் ஜாவுக்கு சவால் விடுகிறது. நாங்கள் இந்தப் படத்தை எடுக்க விடமாட்டோம். இதுவரை பிரகாஷ் ஜாவின் முகத்தை தான் நாங்கள் கறுப்பாக்கி விட்டோம். நாங்கள் பாபி தியோலை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று சுஷில் சுர்ஹெலே கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இணையத் தொடரின் தலைப்பை மாற்றக் கோரி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Source: New Indian Express, NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.