Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் முக்கிய நபரும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகனுமான ஆஷிஷ் மிஸ்ராவிற்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிப்ரவரி 10ஆம் தேதி பிணை வழங்கியது.

அதைத்தொடர்ந்து, நேற்று(பிப்பிரவரி 15), சிறையில் இருந்து ஆஷிஷ் மிஸ்ரா விடுதலை செய்யப்பட்டார்.

லக்கிம்பூர் வன்முறை: ‘பிரிட்டிஷ் முன்னால் இருந்து சுடும்; பாஜக பின்னால் இருந்து ஜீப்பேற்றி கொல்லும்’- அகிலேஷ் யாதவ்

நேற்று(பிப்பிரவரி 15), உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில், சம்யுக்த் கிசான் மோர்ச்சாவில் உள்ள முக்கிய விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “அஜய் மிஸ்ரா மற்றும் ஆஷிஷ் மிஸ்ராவின் லக்கிம்பூர் கெரி அத்தியாயத்தை முழு நாடும் முழு உலகமும் பார்த்தது. அவர்கள் கொடூரமான ஒரு குற்றத்தைச் செய்திருந்தாலும், மூன்று மாதங்களில் அவருக்கு பிணை வழங்கப்படுகிறது. இன்று அவர் சிறையில் இருந்து வெளிவருவதை எல்லோரும் பார்ப்பார்கள். இவ்வழக்கு தொடர்பாக, சம்யுக்த் கிசான் மோர்ச்சா உச்ச நீதிமன்றத்தை அணுகும்” என்று கூறியுள்ளார்.

லக்கிம்பூர் கலவரம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் – வசை பாடிய அமைச்சர் அஜய் மிஸ்ரா

“அப்படியானால், இதுபோன்ற சர்வாதிகார அரசாங்கம் தேவையா அல்லது வாகனத்தின் கீழ் மக்களைக் கொன்று குவிப்பவருக்கு மூன்று மாதங்களில் பிணை கிடைக்கப் பெறும் வகையிலான அமைப்பு தேவையா? வரும் காலங்களில் அவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கின் இணையவழி நீதிமன்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு தனது கருத்தை முன்வைக்கையில், மின்சாரம் தடைபட்டது என்றும் அதனால் முழு வாதத்தையும் நீதிமன்றத்தின் முன் வைக்க முடியவில்லை என்றும் ராகேஷ் திகாயத் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்