Aran Sei

இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறி வசைபாடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

Mohammed Siraj

ந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே சிட்னியில்  நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் வீரரான முகமது சிராஜை மைதானத்தில் உள்ள பார்வையாளர்களில் சிலர் இனவெறி சொற்களால் கேலி, கிண்டில் செய்து பாட்டு பாடியுள்ளனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் சம்பவம் தொடர்பாக முகமது சிராஜ் அளித்த புகாரின் பேரில், டெஸ்ட் போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில், அந்தச் சம்பவத்திற்கு தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஆறு நபர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரருக்கு நிகழ்ந்த தாக்குதல்: இனவெறிக்கெதிராக ஒன்றிணைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்

இதைத் தொடர்ந்து, அந்நாட்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜனவரி 10ஆம் தேதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் வெளியேற்றம் செய்யப்பட்ட நபர்கள் ஆறு பேரும், இந்தியக் கிரிக்கெட் வீரர்களை விமர்சிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், கிரிக்கெட் வீரர்களை இனவெறி பேச்சால் விமர்சித்த உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையென, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தி ஏச் (The Age)  செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் விசாரணையின் முடிவுகுறித்த அறிக்கையை, 14 நாட்கள் கால அவகாசத்திற்குள் சமர்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

சின்னப்பம்பட்டி டூ சிட்னி – கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு அவசியமா? – நவநீத கண்ணன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் தொடரில், இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ், பூம்ரா ஆகியோர் இனவெறிக்கு உள்ளாக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிகெட் கவுன்சிலிடம் புகாரளித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்கு மன்னிப்பும் கோரியிருந்தது.

நடந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாருக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரை இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அந்த மைதானத்தில் விளையாடப்போவதில்லையென முடிவெடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறி வசைபாடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்