பாகிஸ்தானில், தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, “இது இந்தியா அல்ல, பாகிஸ்தான்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தான் ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பாக மக்களிடையே பேசியதற்காக, பாஷ்டீன் என்பவரை இஸ்லாமாபாத் காவல்துறை கைது செய்தது. அவர் மீது தேசத்துரோகச் சட்டம் மற்றும் குற்றவியல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி, பாஷ்டீனின் கைதை கண்டித்து இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
’பாகிஸ்தான், சீனா செல்ல நேரம் உள்ள பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை’ – பிரியங்கா காந்தி
அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பலரை கைது செய்த இஸ்லாமாபாத் காவல்துறை, அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய முக்கிய நபர்களான மோஷின் தவார் (நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் அமார் ரஷித் (ஆவாமி உழைப்பாளர்கள் கட்சி) மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் தேசத்துரோக சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற்ற காவல்துறை, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.
‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது’ – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதார் மினல்லா “ஒரு ஜனநாயக அரசு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு, மக்கள் போராட்டத்தை முடக்க கூடாது. அரசாங்கம் விமர்சனத்துக்கு அஞ்சக்கூடாது. மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை நீதிமன்றம் பாதுகாக்கும். அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும். இது இந்தியா அல்ல, பாகிஸ்தான்” எனக் கூறி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக டான் (Dawn) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
The rising number of cases where social and human rights activists are arrested and charged with ‘sedition’ has invited comment from a Court in Pakistan. We should hang our heads in shame.https://t.co/ZQ0Doyyyer
— P. Chidambaram (@PChidambaram_IN) February 18, 2021
பாகிஸ்தான் நீதிபதியின் இந்த கருத்தை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், ”தேசத்துரோக சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் நீதிமன்றம் விமர்சித்துள்ளது. நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.