அசாம் மாநிலம் ஹைலகண்டியில், அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு பிணை வழங்கி உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ் கல்லூரியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜமீர் அகமது சவுத்ரி, அரசாங்கக் கொள்கைகளை விமர்சித்து அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராக நாகரீமற்ற மொழியை பயன்படுத்தியதாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
”இந்த மின்னஞ்சல்கள் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆணையருக்கு அனுப்பப்பட்டன. நாங்கள் அவரை விசாரணைக்காக அழைத்தோம். பிறகு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தோம். இருப்பினும் அன்றே தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிணை வழங்கினார். அவர் மீதான விசாரணை தொடரும்” என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் தத்துவத்துறை பேராசிரியராக ஜமீர் அகமது சவுத்ரி பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், “அவரது மின்னஞ்சல்களில் நாட்டின் கல்வி முறையை விமர்சித்திருந்தார். அது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும், முதலமைச்சர் குறித்து குறிப்பிடும் போது நாகரீமற்ற மொழியை பயன்படுத்தியிருந்தார். “ என்று கூறியுள்ளார்.
சவுத்ரியின் நான்காம் வகுப்பு படிக்கும் மகன் சார்பாக, அரசாங்கத்தின் ‘குனோத்சவ்’ பள்ளித் திட்டத்தை அவர் விமர்சித்திருந்தார்.
பேராசிரியர் மீது காவல்துறை தானாக முன்வந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்), 294 ஏ (ஆபாசமாக பேசுதல்) நீதி சிறார் சட்டம் பிரிவு 83(2) (சட்டவிரோத நடவடிக்கைகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்துதல்). உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சவுத்ரி கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர் அமலேந்து பட்டாச்சார்ஜி, “எங்கள் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக ஜமீர் அகமது சவுத்ரி பணியாற்றி வருகிறார். அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் என்பதை நாங்கள் அறிவோம். அதன் பிறகு கைது செய்யபட்டது குறித்து காவல்துறையிடமிருந்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.
Source: The Indian Express
ரவுடிகளோடு விவாதங்களுக்கு வரும் பாஜக | Vanni Arasu Interview | ABP Nadu | Makizhnan | BJP | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.