அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்தித்திற்கு தீ வைத்தனர்.
ஷஃபிகுல் இஸ்லாம் குடிபோதையில் பிரச்சினை செய்ததால் அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஷஃபிகுல் இஸ்லாமிடம் காவல்துறையினர் 10,000 ரூபாய் லஞ்சம் மற்றும் ஒரு வாத்து கேட்டுள்ளனர். அதனைத் தர முடியாது என்று ஷஃபிகுல் இஸ்லாம் கூறியதால் காவல்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று மரணமடைந்தவரின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.
காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்
இதன் பின்னர் மரணமடைந்தவரின் குடும்பம் மற்றும் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளின் மக்கள் ஒன்று சேர்ந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையால் போராட்டக்காரர்கள் காவல்நிலையத்திற்கு தீவைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (மே 22) காவல்நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் வீடுகளை நாகோன் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது.
‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை
இது தொடர்பாக அசாம் காவல்துறை தலைமை இயக்குநர் பாஸ்கர் ஜோதி மஹந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஷஃபிகுல் இஸ்லாமின் மரணம் துரதிஷ்டமானது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்துள்ளோம். இதில் காவல்துறையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் கண்டிப்பாகத் தண்டிப்படுவார்கள்.
ஆனால் இதற்காக எல்லாம் காவல்நிலையத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : The Wire
ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.