ஜிக்னேஷ் மேவானி 5 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட வழக்கில் குஜராத் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டார்.
ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக அசாம் மாநில பாஜக பிரமுகர் புகார் அளித்ததன் பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 21) குஜராத்தின் பலன்பூர் பகுதியில் வைத்து அசாம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர்.
பெண் காவலரை தாக்கியதாகப் புகார் – ஜிக்னேஷ் மேவானியை மீண்டும் கைது செய்த காவல்துறை
பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த வழக்கில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில் பெண் காவலரை தாக்கி அவமானப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி மீது பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, காயப்படுத்துதல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட புகார்கள் இருந்ததால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம் – மீண்டும் கைது செய்த காவல்துறை
கைது நடவடிக்கை பிரதமர் அலுவலகத்தின் பழிவாங்கும் செயல் என்று தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மோவானி, “இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் சதி. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அவர்கள் இதை செய்துள்ளார்கள். முதலில் ரோஹித் வெமுலாவிற்கு செய்தார்கள். அடுத்து சந்திரசேகர் ஆசாத்திற்கு செய்தார்கள், தற்போது என்னை குறிவைக்கிறார்கள்” என்று மேவானி தெரிவித்துள்ளார்.
கிரிமினல் சதி, மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம், ஆத்திரமூட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
1995 ஆண்டு முதல் குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு புகார் வந்த 24 மணிநேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் பிணை மனுவை பர்பேட்டாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
Source: the wire
பந்து பொறுக்கி போடாதீங்க தமிழிசை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.