Aran Sei

அசாம்: ஜிக்னேஷ் மேவானியின் கைதைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டம்

குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அடைக்கப்பட்டுள்ள கோக்ரஜார் காவல் நிலையத்தை காங்கிரஸார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் ஏப்ரல் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்

ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று அவரின் உதவியாளர் கூறியிருந்தார்.

ஜிக்னேஷ் மேவானி கைது: பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி

பின்னர், அவரின் ட்விட்டர் பதிவுக்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதற்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

பின்னர், கைது குறித்து பேசிய ஜிக்னேஷ் மேவானி, ”நம் நாட்டில் மத ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடப்பதால், இச்சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த ட்வீட்டில் கூறி இருந்தேன். அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இச்செயல் அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

கைதுக்குப் பிறகு அசாம் நீதிமன்றத்தில் ஜிக்னேஷ் மேவானி ஆஜர் படுத்தப்பட்டார். அவரின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளக் காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று கூறி அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி கோக்ரஜார் காவல் நிலையத்தின் முன் காங்கிரஸார் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அசாம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜாகிர் உசேர் சிக்தர் கூறும்போது, குஜராத்தில் அவரின்(ஜிக்னேஷ்) செல்வாக்கை முறியடிக்கவே இக்கைது நடந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

குஜராத்தில் நரேந்திர மோடியின் புகழ் சரிந்து பாஜக தோல்வி அடையும் என்றும் அசாம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜாகிர் உசேர் சிக்தர் குறிப்பிட்டுள்ளார்.

“குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ட்வீட்டிற்காக அஸ்ஸாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது விசித்திரமானது. இது குஜராத்தில் மழை பெய்யும்போது அசாமில் குடையைத் திறப்பது போன்றது” என்று ரைஜோர் தளம் கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.

Source: newindianexpress

இசைஞானி இளையராஜாவைப் புரிந்து கொள்வது எப்படி – விளக்குகிறார் தோழர் மருதையன்

அசாம்: ஜிக்னேஷ் மேவானியின் கைதைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்