Aran Sei

அசாம்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்

Credit: The Wire

சாமில் காவல்துறை சுதந்திரமாக இல்லாததாலும் அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாலும் ஜிக்னேஷ் மேவானி மீது புனையப்பட்ட வழக்கில் உடனடியாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்,” என்று பெண் காவல் அதிகாரி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பார்பேட்டா தொகுதியின் நாடாளுமன்ற  உறுப்பினர் கலீக் தெரிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானியின் கைது ஒரு திட்டமிட்ட சதி என்று கலீக் கூறியுள்ளார்.

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

குஜராத்தில் ட்வீட் செய்த மேவானியை அசாம் காவல்துறை ஏன் கைது செய்துள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், பிரதமரை அஸ்ஸாம் முதல்வர் மகிழ்விக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு முதல்வர் இப்படி நடந்துகொள்வது வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக கலீக் வழக்குப் பதிவு செய்ததாகவும் ஆனால், உள்ளூர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்குப் பிறகும் கூட காவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. “எந்த விலை கொடுத்தாவது பேச்சு சுதந்திரத்தை நசுக்க பாஜக அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அசாம்: ஐந்து நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று (ஏப்.28) அசாமுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மஞ்சித் மஹந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், இளைஞர் காங்கிரஸ், என்.எஸ்.யு.ஐ., சேவா தள உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து செல்கள் மற்றும் உறுப்புகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: newindianexpress

மாரிதாஸை கைது செய்ய வேண்டும் | Surya Xavier Interview

அசாம்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்