Aran Sei

‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எந்த பங்கும் இல்லை’- ராஜஸ்தான் முதலமைச்சர்

ந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் எந்த பங்கையும் வகிக்கவில்லை என்றும் அதனால், பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்க்காரர்களும் ஒருவித குற்ற உணர்ச்சியில் உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 19), ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அசோக் கெலாட் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “காங்கிரஸ் கட்சியானது சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டிற்காக பல தியாகங்களைச் செய்துள்ளது. ஆனால், சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் எந்த பங்கையும் வகிக்கவில்லை. அதனால், பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்க்காரர்களும் ஒருவித குற்ற உணர்ச்சியில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

‘ஒவ்வொரு மனிதரின் மரபணுவும் தனித்துவமானதென இந்துக்கள் நம்புவர்’- ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ராகுல் காந்தி பதிலடி

“மதவாதத்தையும் சாதியவதத்தையும் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயல்கிறது. பாசிச சக்திகளால் நம் நாடு சூழப்பட்டு வருகிறது. நம் நாட்டை ஒருவிதமான அச்சம் சூழத்தொடங்கியுள்ளது. ஊடகங்கள்மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் ஒன்றிய அரசால் தவறாக கையாளப்படுகிறது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விமர்சனங்களும் மாற்றுக்கருத்துகளும் ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள் என்றும் ஆனால், தற்போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மேல் மாற்றுக்கருத்தை வைப்பவர்கள், சிறையில் தள்ளப்படுகிறார்கள் என்றும் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எந்த பங்கும் இல்லை’- ராஜஸ்தான் முதலமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்