Aran Sei

டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், உத்தரவு மீறி இடிக்கும் பணியில் வடக்கு டெல்லி மாநகராட்சி ஈடுபட்டது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 21), சம்பவ இடத்தை பார்வையிட வருகை தந்துள்ள ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவருமான அசாதுதீன் ஓவைசியை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்பகுதிக்கு ஒவைசி செல்ல முயன்றதால், ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை குறித்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியை அவர் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜஹாங்கிர்புரி கலவரம்: ‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் குடும்பமாக வாழ்ந்தோம்’ என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்

இது குறித்து அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, “ஆம் ஆத்மி கட்சியினர் அம்மக்களை ரோஹிங்கியாக்கள் என்றும் வங்கதேசத்தினர் என்றும் கூறுகிறார்கள். நான் அதைக் கண்டிக்கிறேன். ஜஹாங்கிர்புரியில் புல்டோசர்களைப் பயன்படுத்தியதற்காக பாஜக தலைவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இம்மக்கள் குற்றவாளிகள் என்றும் அவர்களின் வீடுகளை இடிக்கப்பட வேண்டும் என்றும் மேயர் கூறுகிறார்” என்று கூறியுள்ளார்.

ஹனுமன் ஜெயந்தியன்று ஜஹாங்கிர்புரியில் காவல்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஊர்வலம் நடத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: PTI

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்துவதே தவறா? பத்திரிகையாளர் ஜென்ராம்

டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்