நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மீதான குற்றச்சாட்டு புனையப்பட்டது என குற்றம்சாட்டி வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிரா அரசின் அமைச்சர் நவாப் மாலிக், இது தொடர்பாக புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (என்சிபி) அக்டோபர் 3 ஆம் தேதி ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சட்டவிரோதமான போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என என்சிபி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், நடிகர் ஷாருக்கானை குறிவைத்து அவரது மகன்மீது போலியாக வழக்கு பதியப்பட்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆர்யன்கான் மீதான வழக்கு போலியானது என தெரிவித்திருந்த நவாப் மாலிக், என்சிபியை பாஜக தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஆர்யன் கானை என்சிபி அலுவலகத்திற்குள் பாஜகவைச் சேர்ந்த மனிஷ் பனுசாலி அழைத்துச் செல்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
அவரது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அவர் இரு காணொளிகளை வெளியிட்டுள்ளார். ஆர்யன் பயணித்த கப்பலை என்சிபி சோதனையிட்டபோது, மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்திற்குள் பாஜகவைச் சேர்ந்த மனிஷ் பனுசாலி மற்றும் தனியார் டிடெக்டிவ் கிரண் பி கோஸ்வாமி நுழைவது ஒரு காணொளியிலும், என்சிபி அலுவலகத்திற்குள் இருந்து வெளியே வந்து அவர்கள் காரில் ஏறிக் கிளம்புவது மற்றொரு காணொளியிலும் பதிவாகியுள்ளது.
Another video footage of Kiran P Gosavi and Manish Bhanushali leaving the NCB office. pic.twitter.com/9VxnSNgTxK
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 6, 2021
மேலும், இந்த வழக்கு போலியாந்து என்பது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், இதை நாளை (அக்.9) மதியம் 12 மணிக்கு மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடயிருப்பதாக நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.