Aran Sei

மக்களுக்கு வரி விதித்து பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் மீது வரிகளை குவித்து வருவதாகவும், ஆனால் பணக்காரர்களுக்கு அதை தள்ளுபடி செய்வதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, ஜூலை 16 அன்று பண்டேல்கண்டில் ஒரு விரைவுச் சாலை திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி பேசும்போது, ” இலவசங்களை வாக்குறுதியளித்து வாக்குகளை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. என்று தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி: கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்கிறது சிறப்பு புலனாய்வு துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால் “ஓய்வூதியத்திற்கு பணம் இல்லை என்று அவர்கள் அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நாட்டில் பணமில்லாமல் போனது” என்று கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு, மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்த கெஜ்ரிவாலை பாஜக தலைவர்கள் விமர்சித்தனர்.  இது பொது நிதியில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர்.

உ.பி.: இந்த உணவை விலங்குகள் கூட உண்ணாது – தரமற்ற உணவால் கண்ணீர் விடும் காவலர்

இதற்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இலவச திட்டங்கள்தான் வறுமையில் இருந்து மக்கள் வெளியே வர உதவியது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற தரமான சேவைகள் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

kallakurichi Sakthi School Maths Teacher Affidavit vs Shanthi Statement | kallakurichi Case | Deva

 

மக்களுக்கு வரி விதித்து பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்