Aran Sei

அருணாச்சல பிரதேச பாஜக முதலமைச்சர்மீது ஊழல் புகார்கள்: பதவி விலக கோரி தலைநகரில் 36 மணி நேர பந்த்

பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு பதவி விலகக் கோரி, அம்மாநிலத் தலைநகர் இட்டாநகரில் இளைஞர் அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து நிஷி இளைஞர் சங்கமானது நேற்று(ஜனவரி 13) காலை 5 மணி தொடங்கி, 36 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து, வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறி, தோராயமாக 100 சமூக செயல்பாட்டாளர்களை தடுப்புக் காவலில் காவல்துறையினர் அடைத்தனர்.

இவ்வேலைநிறுத்தத்தில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று இட்டாநகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டால் நாடு என்னவாகும்’? – பாஜக எம்.பி. வருண் காந்தி

மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்க, 48 மணி நேரத்திற்கு இணைய சேவையை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

ஜனவரி 14ஆம் தேதி வரை சரியான காரணம் அல்லது மருத்துவ அவசரதேவை போன்றவற்றைத் தவிர்த்து, தலைநகர் இட்டாநகர் பகுதிக்குள் வெளி நபர்கள் நுழைவதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.

முதலமைச்சர் பெமா கண்டுவுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி வரும் அனைத்து நிஷி இளைஞர் சங்கம், அக்குற்றச்சாட்டுகள் குறித்து பதினைந்து நாட்களுக்குள் விளக்கமளிக்கக் கோரி மாநில அரசிடம் டிசம்பர் 10 அன்று ஒரு மனுவை  சமர்ப்பித்தது. அம்மனுவிற்கு அரசு பதில் அளிக்காததால், ஏழு நாட்களுக்குள் முதலமைச்சர் பெமா கண்டு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

Source: New Indian Express

அருணாச்சல பிரதேச பாஜக முதலமைச்சர்மீது ஊழல் புகார்கள்: பதவி விலக கோரி தலைநகரில் 36 மணி நேர பந்த்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்