Aran Sei

ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருக்கும்  சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதை “ஜனநாயக விரோதம்”,  “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மேலும்,  கருத்து வேறுபாடுகளை நசுக்க முயற்சிப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த ட்விட்தான் காரணமென்று காவல்துறை கூறியதாக ஜிக்னேஷ் தெரிவித்திருந்தார்.

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி,  அவரை(ஜிக்னேஷ் மேவானியை) மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு இது அவமானம் என்று தெரிவித்துள்ளார்.

மோடி ஜி, அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் நீங்கள் அதிருப்தியை நசுக்க முயற்சி செய்யலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் உண்மையை சிறையில் அடைக்க முடியாது” என்று ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “#DaroMat” மற்றும் “#SatyamevaJayate” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கூறியுள்ளார்.

கைதுக்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசியுள்ள ஜிக்னேஷ் மேவானி, “எனக்கு எஃப்ஐஆர் நகல் வழங்கப்படவில்லை. நான் எழுதிய ஒரு ட்வீட்டுக்காக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்திருப்பதாக கூறுகிறார்கள். அந்த ட்வீட்டில், அனைவரும் அமைதிக்காக வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நம் நாட்டில் மத ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடப்பதால், இச்சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த ட்வீட்டில் கூறி இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

source: newindianexpress

ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்