Aran Sei

‘ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்கள் கைது’ – விடுவிக்கக் கோரி சாமியார்கள் போராட்டம்

ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து சாமியார்கள் போராட்ட்த்தில் இறங்கியுள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக கொலை வெறி தூண்டும் பேச்சை பேசியதற்காக நதீம் அலி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 2 ஆம் தேதி  ஹரித்வாரில் உள்ள ஜ்வாலாபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக தர்ம சன்சத் நிகழ்ச்சியின் அமைப்பாளர் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, ஜிதேந்திர நாராயண் தியாகி, சிந்து சாகர், தரம்தாஸ், பர்மானந்தா, சாத்வி அன்னபூர்ணா, ஆனந்த் ஸ்வரூப், அஷ்வினி உபாத்யாய், சுரேஷ் சாஹ்வான், பிரபோதானந்த் ஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

‘ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்தான் ரோஹித் வெமுலா’ – ராகுல் காந்தி

தரம்சன்ஸத்தின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, வசீம் ரிஜ்வீ மட்டும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து தர்ம சபையின் முக்கிய அமைப்பாளர் நரசிங்கானந்த் சரஸ்வதி காலவரையற்ற உண்ணா விரதம் தொடங்கினார். பிறகு, அவரும் கைது செய்யப்பட்டார். அத்துடன், இஸ்லாமியப் பெண்களை இழிவாக பேசியதாக அவர் மீது தனி வழக்கு பதிவாகி உள்ளது.

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

இதை கண்டித்து ஹரித்து வாரில் 2,000-க்கும் மேற்பட்ட இந்து சாமியார்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளனர். இது குறித்து சாமியார் கிருபா தாஸ் கூறும்போது, ‘‘தரம்சன்ஸத்தின் மேடையில் பேசியவர்கள் மீதான வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிடில் பிரயாக்ராஜின் அலகாபாத்தில் மிகப்பெரிய சாமியார்கள் சபை கூட்டி பாஜக.வை தேர்தலில் தோல்வியுற செய்ய பொதுமக்களிடம் வலியுறுத்து வோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்கள் கைது’ – விடுவிக்கக் கோரி சாமியார்கள் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்