மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது, வன்முறை வெடித்தது. இவ்வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். சில கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11ஆம் தேதி அன்று, வன்முறைக்குக் காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளையும் கடைகளையும், மத்தியப் பிரதேச பாஜக அரசு இடித்துத் தள்ளியது. புல்டோசர்களால் இடிக்கப்பட்ட அக்கடைகளில் ஒன்று வாசிம் ஷேக் என்பவருக்குச் சொந்தமானது. வன்முறையின்போது, கல் எறிந்ததாக இரு கைகள் இல்லாத வாசிம் ஷேக்கின் கடையும் இடித்துத் தள்ளப்பட்டது.
இது குறித்து பேசியுள்ள வாசிம் ஷேக், “நான் எனது கடையை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். என் கடையை நம்பிதான் என் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். என்னுடைய குழந்தைகளும் வயதான என் தாயும் என்னை நம்பியே இருக்கிறார்கள். சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் கூட எனக்கு வேறொருவரின் உதவி தேவை. அப்படியிருக்கையில் கை இல்லாதவன் எப்படி கல்லெறிவான்?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Source: Zee news, Scroll.in
பாஜக செய்யும் Bulldozer அரசியல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.