கேள்வி: மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு அமைவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் வேகமாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற முடியும். ஆகவே இரட்டை எஞ்சின் (டபுள் இஞ்சின்) சர்க்காருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டீர்கள். அது குறித்து உங்கள் கருத்தென்ன?
மோடி: “பெற்றோர்கள் குடும்பத்தின் நன்மைக்காக இந்த திசையில் செல்லலாம் என்று கூறினால் பிறர் மாற்றுக் கருத்து ஏதும் சொல்லிக் கொண்டிருக்காமல் குடும்பத்தின் நன்மைக்காக அந்த திசையில் செல்வார்கள். ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொள்வதில்லை. ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டால் நாட்டின் வளர்ச்சியின் வேகம் தடைபடும். ஆகவே நாட்டின் நன்மையின் பொருட்டு மக்கள் நலத்திட்டங்களை இணைந்து வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிலும் அரசியல் செய்ய புகுந்து என் மாநிலம் என மனம் போன போக்கில் செயல்படுவேன் என்று கூறினால், எவ்வளவு நஷ்டமாகும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு ஏழை நோயாளி தன்னுடைய நோயிலிருந்து மீண்டு வருவதற்கு 5 லட்ச ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. மாநிலங்களை பொறுத்தவரையில் பெறுவது மட்டும் தான்; தருவதற்கு எதுவுமில்லை. சில மாநிலங்களில் அவரவர்களுக்கு சில திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. நாங்கள் அதை நிறுத்தச் சொல்லவுமில்லை. இது போன்ற திட்டங்களில் பலன் என்னவென்றால், ஒருவேளை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கேரளத்திற்கு சென்ற இடத்தில், அவருக்கு ஏதானும் ஆகிவிட்டால், இந்த திட்டத்தின் அடிப்படையில் அவருக்கு கேரளத்திலும் சிகிச்சைக்கான உதவி கிடைக்கும்.
உத்தர பிரதேசத்தில் இருந்தால் மட்டும் தான் அவருக்குப் பலன் கிடைக்கும் என்பது அல்ல, கேரளத்திற்கு சென்றாலும் அவருக்குப் பலன் கிட்டும். இந்த திட்டத்தில் மாநிலங்கள் இணைந்து கொள்ள வேண்டும். ஆகவே இரண்டு இன்ஜின்களும் இணைந்தால்தான் ஏழைகள் பலன் பெறுவார்கள். சில மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். தில்லியில் அவ்வாறான அரசுசாகத்தான் இருக்கிறது. தில்லியைச் சேர்ந்த நபர் இந்தியாவின் வேறு எந்த மூலைக்கு சென்றாலும் அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் அவருக்கு இதன் பலன் கிடைக்காது.
அதே போல நாங்கள் ஒரு தேசம், ஒரு ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். ஏனென்றால் ஏழைகள் இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ரேஷன் கடையின் வழியாக உணவுப் பொருட்களை அவர் வாங்கிக் கொள்ள முடியும். மகாராஷ்டிராவுக்கு சென்றாலும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சில மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவில்லை உச்சநீதிமன்றம் அவர்களை கண்டிக்க வேண்டியிருந்தது. ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு என்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூற வேண்டி இருந்தது. ஆக, டபுள் இஞ்சின் சர்க்கார் இருந்தால் ஏழைகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
ஜிஎஸ்டி எடுத்துக்கொள்ளுங்கள். முன்னர் நமது நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் வரி வசூல் செய்யும் முறை வேறுபட்டிருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கும்பொழுது ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிற வேறுபட்ட வரி தொடர்பாக அவர்கள் குழப்பத்தையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஜிஎஸ்டி அவர்களது பிரச்சனைகளை தீர்த்து விட்டது.
நம்முடைய பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் பலமே அந்த பன்முகத்தன்மை தான். அதைப் பாதுகாத்த படியே, நம்முடைய ஆற்றல் வீணாகாத வண்ணம் ஏற்பாடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாட்டின் நலன், ஏழைகளின் நலன், நாட்டு மக்களின் நலன் ஆகியவை தான் எங்கள் நோக்கம்
கேள்வி: ராகுல் மட்டுமல்ல ஸ்டாலின், மெகபூபா, மம்தா என பலரும் உங்கள் கட்சி பன்முகத்தன்மையை மதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஆதலால்,மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழ்நாடு கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பாஜக நுழைந்து ஆட்சி அமைக்கவே முடியாது என்று கூறுகிறார்கள். ஏனென்றால் முழுக்க முழுக்க மையவாத கண்ணோட்டத்தை கொண்ட கடும் போக்கைக் கொண்டது பாஜக. மாநில உணர்வுகளை மதிக்காத கட்சி பாஜக என்றும் காரணம் கூறுகிறார்களே?
மோடி: பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை நாட்டின் வளர்ச்சிக்காக மாநில உணர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதுதான். நாட்டின் பிரதமர்களிலேயே நீண்ட காலம் ஒரு மாநில முதல்வராக இருந்த பிரதமர் நான்தான். ஆகையால் மாநிலங்களில் உணர்வுகள் என்ன, மாநிலங்களின் தேவைகள் என்ன என்பது முழுமையாக எனக்கு தெரியும். வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் பொழுது வெளியிலேயே சந்தித்து அனுப்பி விடுவார்கள். நான் அப்படி இல்லை; நான் அமெரிக்காவின் அதிபரை குஜராத்திற்கும், சீன அதிபரை தமிழ்நாட்டிற்கும், பிரான்ஸ் அதிபரை உத்திரப் பிரதேசத்திற்கும், ஜெர்மன் அதிபரை கர்நாடகாவிற்கும் அழைத்து வந்தேன். அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. ஒரு நாட்டின் சக்தியை அதிகரிப்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உற்சாகம் அளிப்பது; இதுதான் எங்களுடைய பணி.
ஐநா மன்றத்தில் சென்று நான் தமிழ் மேற்கோள்களை சொல்கிறேன். உலக அரங்கில் இந்தியாவிடம் உலகின் பழமையான மொழி இருக்கிறது எனும் பெருமை உருவாகிறது. இதற்கு முன்பு இப்படி வெளிப்படுத்துவது வாடிக்கையாக இருந்தது இல்லையே. அதனால்தான் நான் அனைவரையும் சேர்ந்து அழைத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதுதான் வழி. நாங்கள் பன்முகத் தன்மையில் தான் ஒற்றுமையை காண்கிறோம். ஆனால் , கெடுவாய்ப்பாக சில தலைவர்கள் சுயநலத்திற்காக பன்முகத்தன்மையை , ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்தெடுக்கும் விதையாக பயன்படுத்துகிறார்கள். அது கெடுவாய்ப்பாகும். நாம் பன்முகத் தன்மையில் இருந்து ஒற்றுமையை தரிசிக்கவேண்டும்.
மோடி ஆட்சியில் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் தேசத் துரோக சட்டம் – அபிஷேக் ஹரி
கேள்வி: பிரிவினைவாத சக்திகள் வளர்ந்து விடுவார்கள் என்று கருதவில்லையா காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகள் வேறு, ஆனால் தமிழ்நாடு அல்லது பிற மாநிலங்களில் எடுத்துக்கொண்டால் அங்கே பிராந்திய உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக ஒற்றுமை என்னும் அம்சத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
மோடி: வேலை செய்வதற்கான முறை என்ன என்பதை நான் சொல்கிறேன். பன்முகத்தன்மையும் ஏற்றத்தாழ்வு கொண்ட நம்முடைய நாட்டில் சமூக நீதி என்ற விஷயத்தில் கொஞ்சம் இடரினும் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆகையால் சமூகத்தின் கடைநிலையில் உள்ளவருக்கும், வளர்ச்சியில் பங்கு இருக்க வேண்டும் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். சமூகத்தில் எப்படி சமூகநீதியின் அவசியம் இருக்கிறதோ, அதேபோல மாநிலங்களுக்கு இடையிலும் இருக்கிறது.
ஒரு மாநிலம் கூடுதலாக முன்னேறி இருக்க, மற்றொரு மாநிலம் பின்தங்கி இருந்தால் நாடு முன்னேற்றம் அடையாது. எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நிகழ வேண்டும். வளர்ச்சி அனைவரையும் தொட வேண்டும். அனைத்து நலன்களிலுயும் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆகையால் நாங்கள் ஒரு விஷயத்தை கொண்டு வந்தோம், எல்லா மாநிலங்களும் எங்களோடு தோளோடு தோள் இருக்கின்றன ஒரு மாநிலம் எங்களுடன் நிற்கவில்லை. அது கெடு வாய்ப்பு.
‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்
நாங்கள் கவனித்த வரையில் நூற்றுக்கும் அதிகமான மாவட்டங்கள் மாநில சராசரியை விட கீழே இருக்கின்றன. அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமமான நிதி கிடைத்தாலும் ஏன் இந்த நிலை? நிர்வாக சிக்கல், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனை. நாங்கள் அதில் சில மாவட்டங்களை லட்சிய நோக்கம் கொண்ட மாவட்டங்களாக மாநிலங்களின் அனுமதியோடு அடையாளப்படுத்தினோம். கிட்டத்தட்ட 100-110 மாவட்டங்கள் இருக்கும். அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து நானே மாவட்ட அளவில் தொடர்பு கொண்டு அங்கேயே திட்டம் அமல்படுத்துவது குறித்து விசாரிப்பதுண்டு. நான் மாநில அரசுகளிடம் அவ்வாறான மாவட்டங்களுக்கு இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புங்கள், பதவி உயர்வு பெற்ற வயதான அதிகாரிகளை அனுப்பாதீர்கள் என்று வேண்டிக் கொள்வேன். அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டன, அந்த அதிகாரிகளை மீண்டும் மீண்டும் பணியிடமாற்றம் செய்யாதீர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கேயே இருக்கட்டும் என்று கேட்டுக்கொண்டேன். முழுமூச்சோடு பணிபுரிவீர்கள் பிறகு நல்ல பதவி உயர்வு கிடைக்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்தோம். இன்று அந்த மாவட்டங்களில் சில மாநிலங்களில் சராசரியைவிட உயர்ந்த இடத்திற்கு நகர்கின்றன. நாட்டிற்கு நன்மை விளைகிறதா இல்லையா? என்னுடைய கூட்டாட்சி சிந்தனையை பொருத்தமட்டில் சின்னஞ் சிறு பகுதி கூட பலன் பெறவேண்டும் என்பதுதான். பைபர் நெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அனைத்து கிராமங்களுக்கும், முனைகளுக்கும் போக வேண்டும் என்று விரும்புகிறோம். அதில் கூடுதல் பலத்தை ஆற்றலை செலவிடுகிறோம். ஏனென்றால், எங்களுக்கு இந்த நாடு வளர வேண்டும்.
இதுதான் மாநில உணர்வுகளை கையாளும் என்னுடைய முறையாகும்.
NDTV யில் வெளியான பிரதமர் மோடியின் நேர்காணலின் ஒரு பகுதி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.