Aran Sei

‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

ந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 3), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளன ஏ.ஆர்.ரகுமான், “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினும் அமைச்சர்களும், 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.” என்று கூறியுள்ளார்.

‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்