நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் எனத் தவறாக வதந்தி பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாகத் தொலைத் தொடர்பு மையம் மற்றும் கட்டுப்பாடு அறை பயன்பாட்டைத் துவக்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
”நடிகர் விவேக் ஒரு சிறந்த மனிதர். அவரது இறப்பு துரதிருஷ்டவசமானது. அவரது மரணம் தொடர்பாக அவதூறு பரப்பாமல் இருப்பதே நாம் மனதார செலுத்தும் அஞ்சலி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசிகுறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் எனக்கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்கு பதியப்படும் என பிரகாஷ் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.