கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக சார்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதில், 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என் நான் கூறியது தவறான தகவல் தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
பாஜக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும் போது மாற்றுத் திறனாளிகள் குறித்து பெருமையாக பேசினார். “ஒவ்வொரு மெஷினும் 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடிய மெஷின் 95 பேருக்கு வழங்கப்படுகிறது.” என்றார். அதில் காது கேளாதோருக்கு Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை பரிசோதித்தபோது Made in China என குறிப்பிடப்பட்டிருந்தது
மேலும் 40 டெசிபல் வரை கேட்கும், 10 கிராம் எடை, 6 வால்யம் லெவல் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்த. இதை இணையத்தில் தேடிய போது இதே சிறப்பம்சங்களுடன் கூடிய Cyber Sonic நிறுவனத்தின் கருவி ரூ.345 என குறிப்பிடப்பட்டிருந்தது. ரூ.1,999 மதிப்பு கொண்ட அந்தக் கருவியை அமேசான் 83% தள்ளுபடி போக ரூ.345க்கு விற்பனை செய்வதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
அதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர். காது கேட்கும் கருவி 10,000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குநர் தெரிவித்ததன் அடிப்படையில்தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது.
ஜூனியர் விகடன் இதழில் இன்று, 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையில் நாம் விசாரித்ததில், கொடுக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் 350 ரூபாய்தான் என்ற உண்மை தெரியவந்தது. அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர்கள் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை தமிழக பாஜக வழங்கும்.
அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5,000 ரூபாய் முதலீடாக தமிழக பா.ஜ.க செய்யும். இன்று 4 குழந்தைகளின் பெயரில் செல்வ மகள்/PPF கணக்குகள் தொடங்கப்பட்டு அவரவர் பெற்றோர்களின் கையில் ரசீதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டாக்டர் சர்மிகாவின் சங்கி மூளை | டெய்சி அக்காவின் வளர்ப்பு அப்படி | Aransei Roast | Dr Sharmika
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.