இருவேறு சமூகங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பகைமுரண் மிகவும் கவலையளிக்கிறது என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.
“இந்த முரண் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை பிளவுபடுத்துவதில் ஏற்படுத்திய அழிவை நாம் பார்த்தோம். எந்தச் சூழ்நிலையிலும் இரு சமூகங்களுக்கிடையேயான முரணை மீண்டும் வளர அனுமதிக்க முடியாது. ஏனெனில், அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே கொண்டு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘ஹிஜாப்’, ‘அஸான்’, ‘ஹலால்’ மற்றும் ‘ஒலிப்பெருக்கிகள்’ போன்ற பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். மேலும் அவை வலிமையான பரிமாணங்களை எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“வெறுப்புப் பேச்சுகள் வன்முறை ஏற்படுவதற்கான சூழ்நிலையைக் கொண்டு வருகின்றன. அவை தவிர்க்கப்பட வேண்டும். டெம்பிள் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங் இந்தியா ஃபவுண்டேஷனின் அமைப்பின் தலைவர் என்ற முறையில் நான் கூற விரும்புவது. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாக இது இருக்கிறது, இது வரை நடந்த எல்லா சம்பவங்களில் இருந்தும் பின்வாங்கி தங்களுடைய செய்லபாடுகளை மறுசீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.
Source: Thehindu
மரண படுக்கையிலிருந்து Congress எழுமா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.