Aran Sei

ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், அச்சுதாபுரம் பகுதியில் ‘சீட்ஸ்’  தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஷிப்ட்டில் பணியாற்றி வந்த பெண்களில் 121 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கெனவே கடந்த ஜூன் 3-ம் தேதி இதே தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கம், வாந்தி எடுத்து பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தொழிற்சாலையில் இருந்து சில பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் மீண்டும் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டோரா முறை ஒழிப்பு: ‘பல்லாண்டு கால இழிவு துடைக்கப்பட்டது’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.

இச்சம்பவம் குறித்து அங்கப்பள்ளி காவல் ஆய்வாளர் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் மாலை 6:15 மணி முதல் 7 மணி வரை நடந்துள்ளது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்த இரண்டாவது ஷிப்டில் சுமார் 1000 ஊழியர்கள் இருந்தனர். வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டதாக 50 பெண்கள் அங்கபல்லை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஊழியர்கள் லேசான அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

இதையடுத்து முதல்வர் ஜெகன்மோன் உத்தரவின்படி தொழிற்துறை அமைச்சர் குடி வாடா அமர்நாத், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ‘‘பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும். இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். பரிசோதனை முடிவுகள் வரும்வரை ஒரு வாரத்துக்கு தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார். அதுவரை தொழிலாளர்களுக்கு பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Source: India Today, the hindu

பச்சை பொய் சொல்லும் Nirmala Sitharaman | திருப்பி அடித்த PTR | Kanimozhi | Jothimani | 5G Scam

ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்