Aran Sei

அலிகார் பல்கலைக்கழகத்தின் இலக்கிய விழா ரத்து – சட்டம்  ஒழுங்கை காரணம் காட்டி நிர்வாகம் நடவடிக்கை

Credit: The Wire

அலிகார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவின்  மூன்றாவது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.  சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் விவாதம் மற்றும் இலக்கியக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய விழா மே 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. கொரோணா தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பல்கலைக்கழக வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் நாள் நிகழ்வுகள் எந்த பிரச்சினையுமின்றி நடைபெற்ற நிலையில், இரண்டாம் நாளான மே 21 தேதி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யபடுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

அலிகார் முஸ்லிம் பல்கலை., குறித்து அவதூறு செய்தி – 14 ஆண்டுகளுக்குப் பின் மன்னிப்பு கேட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விருந்தனர்கள் வந்து காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அனுமதி அளிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

”சனிக்கிழமை இரவு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக பதிவிடப்பட்டிருந்ததை கண்டு ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிகழ்வு நடைபெறுவதாக இருந்த கென்னடி  ஆடிட்டோரியம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.” என்று விவாதம் மற்றும் இலக்கியக் கழக உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கல்வி சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வலதுசாரிகள் – விரிவான அறிக்கை

விவாதத்தின் தலைப்புகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சங்கடமாக இருந்ததற்கான அறிகுறிகள் இருந்ததை நினைவு கூர்ந்த அவர், வெளியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக கூட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தெரிவித்த பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஷஃபே கித்வாய், “பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறைக்கு எதிரான புகார் – ஜாமியா மிலியா பல்கலைகழக மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

வெள்ளியன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, அரங்கின் கொள்ளவை விட நான்கு மடங்கு கூட்டம் கூடியது. பல்கலைக்கழக வளாகத்தினுள் கூட்டம் அதிகமாக கூடுவதால் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படலாம் என்ற காரணத்திற்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

தலைப்புகள் மற்றும் அழைப்பாளர்களை தேர்ந்தெடுத்ததில் ஆட்சேபனை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்ற கருத்தை மறுத்த அவர், “விருந்தினர்கள் மற்றும் தலைப்பு பட்டியலை பல்கலைக்கழகம் உறுதி செய்தி பிறகு தான் அனுமதி வழங்கப்பட்டது. அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை… இது முற்றிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஷஃபே கித்வாய் தெரிவித்துள்ளார்.

Source: The Wire

கொல்லப்பட்ட மக்கள் குற்றவாளிகளா? Maruthaiyan Interview | Thoothukudi Sterlite Issue Remembrance 2022

அலிகார் பல்கலைக்கழகத்தின் இலக்கிய விழா ரத்து – சட்டம்  ஒழுங்கை காரணம் காட்டி நிர்வாகம் நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்