கடந்த ஆண்டு, வட கிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தை சிறப்பாக கையாண்ட டெல்லி காவல்துறை, விவசாய போராட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி புகழாரம் சூட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் தலைமையகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கியுள்ளார். குடியரசு தின விழாவிற்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அவர் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.
டெல்லி கலவரம் “தன்னெழுச்சியானது” – உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு!
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ”கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவும், டெல்லியும் பல சவால்களை எதிர்கொண்டது. அந்த ஆண்டு நடந்த அனைத்து சோதனைகளிலும் காவல்துறையினர் வெற்றி கண்டுள்ளனர். அந்த சோதனைகள் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம், ஊரடங்கு, ஊரடங்கு நீக்கம், புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் ஊருக்கு அனுப்பி வைத்தல், அமைதியான முறையில் விவசாய போராட்டங்களை கட்டுப்படுத்தியது ஆகியவை ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் டெல்லி காவல்துறை, பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உட்பட, மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் அடங்கிய குடிமக்கள் விசாரணைக் குழு, டெல்லிக் கலவரத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.