டெல்லி பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதாலும், ஓமிக்ரான் தொற்று இனி பெரியளவில் பரவும் என்ற அச்சுறுத்தலாலும் இந்தியாவின் உயர்மட்ட மருத்துவமனையான டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனை தனது அனைத்து மருத்துவ ஊழியர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
தங்களின் பேராசிரியர்களின் குளிர்கால விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் ரத்து செய்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, என்டிடிவியிடம் பேசியுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், “இது நல்ல அறிகுறி அல்ல. கொரோனா மூன்றாவது அலையை நாடு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. புதிய ஒமிக்ரான் தொற்று உள்ளிட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுகள் பரவிக்கொண்டுதான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
தொற்றுப் பரவலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டெல்லி சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறியுள்ளார்.
டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் விதித்த அன்று, எய்ம்ஸ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோரைத் தவிர்த்து, அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜனவரி 3) டெல்லியில் மட்டும் 4099 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.