Aran Sei

ஜூலியன் அசாஞ்சே வழக்கில் பொய் சொன்னதை ஒப்புக்கொண்ட முக்கிய சாட்சி – உண்மையை புறக்கணிக்கும் அமெரிக்க ஊடகங்கள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு எதிராக பொய் சாட்சி சொன்னதை முக்கிய சாட்சி ஒப்புகொண்டதை ஐஸ்லாந்தின் ஊடகம் வெளியிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த செய்தியைத் திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றன.

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு ஒன்றை இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க அரசு வெற்றிப் பெறும் பட்சத்தில்,  அமெரிக்காவில் போர் குற்றங்களை வெளியிட்ட குற்றத்திற்காக 175வது ஆண்டுகள்வரை சிறை தண்டனையை அசாஞ்சே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இந்த வழக்கில், அமெரிக்க அரசு இணையதளங்களை ஹேக் செய்ய அசாஞ்சே அணுகியதாக  அமெரிக்காவை சேர்ந்த சிகுர்டூர் ‘சிக்கி’ தோடர்சன் சாட்சியமளித்திருந்தார்.

இந்நிலையில், “விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்காக ஹேக்கிங்கில் ஈடுபடவில்லை. தண்டனைகளுக்குப் பயந்து அமெரிக்காவின் நீதித்துறைக்கு ஒத்துழைத்தேன்” என்று  தோடர்சன் தெரிவித்திருப்பதாக ஐஸ்லாந்தை சேர்ந்த ஊடகமான ஸ்டன்டின் செய்தி வெளியிட்டிருந்தது.

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

தோடர்சனின் பொய் சாட்சியத்தின் அடிப்படையில், நீதிமன்ற ஆவணங்களில் தவறான கூறுகளும் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி அமெரிக்காவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டிய நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த செய்தியைப் புறக்கணித்துள்ளன.

’குறைதீர்க்கும் அதிகாரியை இரண்டு நாட்களில் நியமிக்க வேண்டும்’ – ட்விட்டர் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சிஎன்என் நியூஸ், பாக்ஸ் நியூஸ் போன்றவற்றில் ஜூலை 2 ஆம் தேதிவரை ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

அசாஞ்சே வழக்கு மீது இந்த நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை மாறாக, அவரும் அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்ற செய்தியை வெளியிட்டிருந்தனர்.

Source : The Wire

ஜூலியன் அசாஞ்சே வழக்கில் பொய் சொன்னதை ஒப்புக்கொண்ட முக்கிய சாட்சி – உண்மையை புறக்கணிக்கும் அமெரிக்க ஊடகங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்