Aran Sei

இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்க முடிவு செய்த அமெரிக்க அரசு – ஆம்னெஸ்டி அமைப்பு கண்டனம்

னித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி, $735 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க அரசின் முடிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி நிறுவனத்தின் அமெரிக்காவிற்கான ஆலோசகர் பிலிப்பெ நஸீப், “அமெரிக்க அரசு ஆயுதங்களை வழங்குவது போருக்கு வழிவகுக்கும். மேலும், இந்த ஆயுதங்களால் எண்ணற்ற மக்கள் கொல்லப்படக்கூடும்” என்றுக் கூறி ஆயுதம் வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

கட்டடத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் கேட்ட மக்கள் – கோரிக்கை பொருட்படுத்தாது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமரோடு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு ஆதரவையும், 200 மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 10 அன்றிலிருந்து தற்போது வரை இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் 149 பாலஸ்தீனர்கள் பலி – இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு

இதன் காரணமாக தற்போது வரை 61 குழந்தைகள் உட்பட 212 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1500 காயமடைந்துள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுவது குறித்து அர்ஜென்டினாவில் “இனப்படுகொலை வேண்டாம்”, “அனைவரும் பாலஸ்தீனர்களே” உள்ளிட்ட பதாகையை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்க முடிவு செய்த அமெரிக்க அரசு – ஆம்னெஸ்டி அமைப்பு கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்